நடிகர் விஷால் கைது - தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை உடைக்க முயற்சி

நடிகர் விஷால் சென்னை தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்த காரணத்தால் அவரை போலீசார் கைது செய்தனர்.

நடிகர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் விஷால் தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

நேற்று விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தயாரிப்பாளர்கள் குழுவைச் சேர்ந்த டி.சிவா, ஜே.கே.ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 100-ம் மேற்பட்டோர் தியாகாரஜ நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர்.

இதுகுறித்து புகார் தெரிவித்த அவர்கள்:-

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகும் அதில் விஷால் தொடர்கிறார். சங்கத்தின் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளார். அவர் தலைவராகப் பொறுப்பேற்றபோது கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று காலையில் விஷால், அவரது ஆதரவாளர்களுடன் தியாகராய நகரிலுள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குச் சென்றார்.

உள்ளே சென்று தனது பணிகளை பார்க்க வேண்டும் என்று அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் போலீசார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் போலீசாருடன் விஷால் வாக்குவாதம் செய்தார்.

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு எதிர் தரப்பினர் போட்டிருந்தப் பூட்டை விஷால் உடைக்க விஷால் முயற்சி செய்தார்.

ஆனால் போலீஸ் சாவி வைத்து வேண்டுமானால் திறந்து கொள்ளலாம் என்று கூறினர். ஆனால் பூட்டை உடைத்துதான் உள்ளே நுழைவேன் என்று விஷால் உறுதியாக இருந்தார்.

அப்போது விஷாலுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களான மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.