பிங்க் படத்தின் ரீமேக்கில் - நடிகை ஷ்ரத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த டாப்சி
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் தல 59 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு, இந்தியில் ஷ்ரத்தா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 59 படத்தை வரும் கோடை விடுமுறைக்கே ரிலீஸ் செய்வதற்காக பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி சில நாள்கள் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற உள்ளதால் படக்குழு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு என தென் இந்திய மொழிகளில் நடித்து வந்த டாப்சி இந்தியில் அறிமுகமாகி நடித்து வந்தாலும், அவருக்கு பிங்க் திரைப்படம் தான் பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்தியின் முன்னணி கதாநாயகியாகவும் மாற்றியது.
இந்தியில் அமிதாப் பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். டாப்சி நடித்த வேடத்தில் ஷ்ரத்தா கதாநாயகியாக நடிக்கிறார். தான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு, டாப்சி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Good luck 🤗 hope it becomes as significant a film in your career as it became in mine :) 💓
— taapsee pannu (@taapsee) January 28, 2019
“குட் லக். எனக்கு முக்கியமான படமாக இது அமைந்தது போல் உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் என நம்புகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.