அஜித்தின் பங்களிப்பிற்கு நன்றி கூறிய - அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையம் தக்ஷா குழுவிற்கு அஜித் கூறிய ஆலோசனை, பங்களிப்பு, மற்றும் ஈடுபாட்டிற்கு நன்றி கூறும் வகையில், நடிகர் அஜித்க்கு நன்றி கூறி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் விமான வடிவமைப்பு பிரிவில் இருக்கும் தக்ஷா குழுவிற்கு ஆலோசகராக பங்காற்றினார் நடிகர் அஜித். தக்ஷா குழுவின் ஆளில்லா விமானத்தின் வடிவமைப்பிற்கு ஆலோசகராக கடந்த 10 மாத காலம் அஜித் பணியாற்றினார்.
அவரின் ஆலோசனைப் படி உருவாக்கப்பட்ட அந்த ஆளில்லா விமானம், மருத்துவப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் தக்ஷா குழுவினர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இந்த விமான வடிவமைப்பு சமர்பிக்கப்பட்டு இரண்டாம் இடம் பிடித்தது.
இதனைத் தொடர்ந்து தக்ஷா குழுவிற்கு அஜித் கூறிய ஆலோசனை, பங்களிப்பு, மற்றும் ஈடுபாட்டிற்கு நன்றி கூறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையம் நன்றி கூறி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில்… ஆளில்லா விமானம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உங்களின் பங்களிப்பிற்கு மிகவும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது கல்வி நிறுவனம். உங்களின் பங்களிப்பினையும், ஆலோசனைகளையும் வருங்காலத்தில் நிச்சயம் பெற்றுக் கொள்ள விரும்புகிறோம் அந்த கடிதத்தில் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.