நடிகர் ஆர்யா - நடிகை சயீஷாவை மார்ச்-ல் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்

நடிகர் ஆர்யா இன்று காதலர் தினமான நடிகை சாயிஷாவுக்கு திருமண வாழ்த்து சொல்லி, மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவுக்கு மணப்பெண் தேடல் நடந்தது.

இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அது நடக்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார். பெற்றோரும் தீவிரமாக மணப்பெண் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது.

சாயி‌ஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

38 வயதாகும் ஆர்யாவும், 21 வயதாகும் சஷீயாவும் கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சயீஷாவுடனான திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் காதலர் தினமான இன்று சயீஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, காதலர் தின வாழ்த்துகளை ஆர்யா கூறியுள்ளார்.

பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஆசியோடு மார்ச் மாதத்தில் சயீஷாவுக்கும் தனக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் ஆர்யா அறிவித்துள்ளார்.