ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார் - சுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் செய்ய சொன்னார்கள் !
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக, தன்னை படுக்கைக்கு அழைத்தவர்களின் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி கவனம், தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.
ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார் அதில்:-
ஹைதராபாத்தில் அரண்மனை படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற போது, அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார். நான் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர்.சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார். ஃபேஸ்புக் நண்பர் செந்தில்குமாரையும் (கேமராமேன்) சந்தித்தேன்.
சுந்தர்.சி அவரின் அடுத்த படத்தில் எனக்கு முக்கிய கதாபாத்திரம் தருவதாக உறுதியளித்தார். மறுநாள் போன் செய்து நோவோடெல் ஓட்டலுக்கு வரச் சொன்னார்.
படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் கணேஷ் மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட் (பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்…கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஸ்ரீ ரெட்டி பேஸ்புக்கில் போஸ்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார். நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் கூறியுள்ளார்.