விராட் கோலி - ஃபோர்ப்ஸ் டாப் 10 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் !

ஃபோர்ப்ஸ் 2019 டாப் 10 செலிப்ரட்டி பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

விராட் கோலி 2018 அக்டோபர் 1 முதல் 2019 செப்டம்பர் 30 வரை போட்டிக் கட்டணம், பிசிசிஐ மத்திய ஒப்பந்தம், பிராண்ட் அக்ரிமென்ட்கள் மற்றும் ஒவ்வொரு ஸ்பான்சர் இன்ஸ்டாகிராம் பதிவிற்கும் கோடிகளில் ஊதியம் வாங்குவது என பல வகைகளில் சம்பாதித்துள்ளார்.

விராட் கோலி இந்த வருடம் மொத்தம், ரூ .252.72 கோடி சம்பாதித்துள்ளார்.

2-வது இடத்தைப் அக்‌ஷய் குமார் 293.25 கோடி ரூபாய் வருமானத்துடன், 2016 முதல் முதலிடம் வகித்த சல்மான் கான் 3-வது இடத்திற்கு சென்றுள்ளார்.

ஃபோர்ப்ஸ் 2019 சிறந்த பிரபலங்களின் பட்டியல், 2019 இல் அதிக வருவாய் ஈட்டிய முதல் 10 பெயர்கள்:-

1. விராட் கோலி - ரூ .252.72 கோடி

2. அக்‌ஷய் குமார் - ரூ .293.25 கோடி

3. சல்மான் கான் - ரூ .229.25 கோடி

4. அமிதாப் பச்சன் - ரூ .239.25 கோடி

5. எம்.எஸ் தோனி - ரூ .135.93 கோடி

6. ஷாருக் கான் - ரூ .124.38 கோடி

7. ரன்வீர் சிங் - ரூ .118.2 கோடி

8. ஆலியா பட் - ரூ .59.21 கோடி

9. சச்சின் டெண்டுல்கர் - ரூ .76.96

10. தீபிகா படுகோனே - ரூ .48 கோடி

நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் ஆலியா பட் ஆகிய இரு பெண்கள் இது முதல் தடவையாக டாப் 10 இடங்களுக்குள் நுழைய முடிந்துள்ளது.

அக்‌ஷய் குமாரை விட குறைவாக சம்பாதித்த போதிலும் இந்திய கேப்டன் முதலிடம் பிடித்துள்ளார்.

இதற்க்கு ஃபோர்ப்ஸ் விளக்கம் அளித்துள்ளது. இந்த தரவரிசை என்பது வருவாயின் மொத்தத்தையும் மட்டுமின்றி, அவற்றின் புகழ் அளவையும் அடிப்படையாகக் கொண்டது.


<