இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் - நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், நியுசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
இன்று தொடங்கிய நியுசிலாந்தின் ஹாமில்டன் நகரில் 4-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
நிதானமாக பேட் செய்த இந்திய அணிக்கு ஆறாவது ஒவரில் இருந்து சரிவு ஆரம்பித்தது. துவக்க வீரர்கள் ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13), சுப்மான் கில் (9), ஜாதவ் (1), ஹர்திக் பாண்டியா (16) என முக்கிய விக்கெட்டுகளை போல்ட் கைப்பற்றினார்.
இதேபோல், அம்பதி ராயுடு (0), தினேஷ் கார்த்திக் (0), புவனேஸ்வர் குமார் (1) ஆகியோரை வந்த வேகத்தில் வெளியேற்றினார் கிராண்ட்ஹோம்.
இதனால் நிலை குலைந்த இந்திய அணி, 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து, 92 ரன்களில் சுருண்டது.
நியுசிலாந்தின் டிரண்ட் போல்ட் 10 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார். கிராந்தோம் 3 விக்கெட்களும் ஆஸ்லே மற்றும் நீஷம் ஆகியோர் தல 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 93 ரன்கள் எளிய இலக்கை நோக்கி நியுசிலாந்து தனது இன்னிங்ஸை விளையாடிய நியுசிலாந்து அணி 14 .4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 93 ரன்களை சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சிறப்பாகப் பந்து வீசிய ட்ரண்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.