விராட் கோலி ! - ஹீரோவாக போஸ் கொடுக்கும் புதிய போஸ்டர் !!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவருகின்றன.
விராட் கோலி பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார், ஏற்கனவே தனது மனைவி அனுஷ்காவுடனும் சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஹீரோவாக போஸ் கொடுக்கும் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
பத்து வருடங்களுக்குப் பிறகு மற்றுமொரு அறிமுகம். என்னால் காத்திருக்க முடியவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த போஸ்டருக்கு ”டிரைலர்” என்று அவர் டைட்டில் வைத்திருக்கிறார். அதன் கீழே கேப்ஷனாக ’தி மூவி’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.