2020 ஐசிசி டி-20 உலகக்கோப்பை அட்டவணை வெளியானது

அடுத்த ஆண்டு (2020) ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டது.

ஐசிசி 2007-ல் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்தியது. அறிமுக உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.

டி20 உலககோப்பை தொடர், அக்டோபர் 24 முதல் நவம்பர் 15 வரை நடைப்பெற இருக்கிறது.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் 45 போட்டிகள், பெர்த், அடிலெய்ட், ஹொபார்ட், மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் ஆகிய 7 நகரங்களில் உள்ள 7 மைதானங்களில் நடைபெற உள்ளது.

ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகளில் முதல் 8 அணிகள் நேரடியாக ‘சூப்பர் 12’ சுற்றில் விளையாடும்.

முதல் ‘ஏ’ பிரிவில்:-

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டிஸ், நியூசிலாந்து மற்றும் இரண்டு தகுதி பெறும் அணிகள் இடம் பெற்றுள்ளன.

இரண்டாம் ‘பி’ பிரிவில்:-

இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு தகுதி பெறும் அணிகள் இடம் பெற்றுள்ளன.

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.

அக் 24 : இந்தியா- தென்ஆப்பிரிக்கா.

அக் 29 : இந்தியா- தகுதி பெறும் அணி (ஏ-2).

நவ 1 : இந்தியா- இங்கிலாந்து.

நவ 5 : இந்தியா- தகுதிபெறும் அணி (பி-1)

நவ 8 : இந்தியா- ஆப்கானிஸ்தான்.

டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதி போட்டி நவம்பர் 11 மற்றும் 12 –ம் தேதி நடைப்பெறும். இறுதி போட்டி நவம்பர் 15 –ம் தேதி நடைப்பெறவுள்ளது.