ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி அபார வெற்றி - தொடரை 2-1 என கோப்பையை கைப்பற்றியது

மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரை 2-1 என கோப்பையை கைப்பற்றியது.

இன்று மெல்போர்னில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

டாஸில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

ஏற்கெனவே இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடரில் சமநிலையில் உள்ளன. இன்றைய போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.

ஆஸ்திரேலியா அணி 48. 4 ஓவரில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியில் ஹன்ஸ்கோம் 58 ரன்களும், ஷான்மார்ஷ் 39ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார்(2 விக்கெட்), சாஹலின் (6 விக்கெட்) அபார பந்து வீச்சால் 230 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இதனையடுத்து இந்திய அணி 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி ரோஹித் 9, தவான் 23 ரன்களில் வெளியேறி சுமாரான துவக்கம் அளித்தனர்.

அடுத்து கோலி - தோனி இணைந்து அணியை மீட்டனர். கோலி 46 ரன்களில் வெளியேறினார். அடுத்து தோனி - ஜாதவ் இணைந்து ஆஸ்திரேலியா பந்து வீச்சை சமாளித்து கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 எனக்கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது.

டோனி 114 பந்தில் 87 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 57 பந்தில் 61 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடர் நாயகனாக தோனி அறிவிக்கப்பட்டார். தோனி மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக இருதரப்பு தொடரை வென்றுள்ளது. இந்திய அணி டெஸ்ட் தொடரை தொடர்ந்து, ஒருநாள் தொடரையும் இந்திய அணி வென்றது.