விராட் கோலி - ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்ததார் !
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 129 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 157 ரன்கள் குவித்தார்.
81 ரன்கள் அடித்திருக்கும்போது 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.
விராட் கோலி 9 ஆயிரம் ரன்களில் இருந்து 10 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு அதாவது ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு கோலி 11 இன்னி்ங்ஸ்கள் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை 205 இன்னிங்ஸ்களிலேயே கோலி பத்தாயிரம் ரன்களைக் கடந்து முறியடித்தார். சச்சின், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், தோனிக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த ஐந்தாவது இந்திய வீரர் விராட் கோலி ஆவார்.
பத்தாயிரம் ரன்களை கடந்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் கோலி 13வது வீரராக இணைந்துள்ளார்.
விராட் கோலியின் அதிவேகம்:- (ரன்) 1000 - 24 இன்னிங்ஸ். 2000 - 53 இன்னிங்ஸ். 3000 - 75 இன்னிங்ஸ். 4000 - 93 இன்னிங்ஸ். 5000 - 114 இன்னிங்ஸ். 6000 - 136 இன்னிங்ஸ். 7000 - 161 இன்னிங்ஸ். 8000 - 175 இன்னிங்ஸ். 9000 - 194 இன்னிங்ஸ். 10000 - 205 இன்னிங்ஸ்
அதிக ரன்கள்:- 18426 - சச்சின். 11221 - சவுரவ் கங்குலி. 10768 - ராகுல் டிராவிட். 10,123 - டோனி. 10,000 - விராட் கோலி.