விராட் கோலி நம்பமுடியாத வீரர் - இங்கிலாந்து வீரர் டாம் குர்ரான் புகழாரம்
இங்கிலாந்து வேகப்பந்து வீரர் டாம் குர்ரான், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 20 ஓவர் போட்டியில் அற்புதமானவர் எனவும், நம்ப முடியாத வீரர் எனவும் கூறியுள்ளார்.
20 ஓவர் உலககோப்பை போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.
இங்கிலாந்து வேகப்பந்து வீரர் டாம் குர்ரான் கூறியதாவது:-
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார். 20 ஓவர் போட்டியில் அற்புதமானவர். நம்ப முடியாத வீரர்.
20 ஓவர் உலககோப்பையில் அவருக்கு பந்துவீசுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.