வருமான வரித்துறை சோதனை - சத்துணவுத் திட்ட ஒப்பந்த நிறுவனங்களில்

தமிழக அரசுக்கு சத்துணவு பொருட்கள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

குமாரசாமி என்பவரால் நடத்தப்படும் கிறிஸ்டி ஃபிரிட்ஜ்கிராம் என்ற நிறுவனம் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு அதிக அளவு முட்டைகளை விநியோகித்து வருகிறது.

கிறிஸ்டி ஃபிரிட்ஜ்கிராம் இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தொடர் புகார் வந்துள்ளது.

இந்நிலையில் தொடர் புகார் வந்ததால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கியுள்ளனர். சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரில் ஆகிய பகுதிகளில் தனித்தனி குழுக்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்திற்கு சொந்தமான எல்லாம் இடங்களில் சோதனை நடக்கிறது.

மேலும் குமாரசாமியின் நெருங்கிய நண்பராக கருதப்படும் ஜெயப்பிரகாஷ் என்பவரின் அக்னி பில்டர்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடக்கிறது.

மொத்தம் 70-க்கும் மேற்பட்ட இடங்களில், 500க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.