இலங்கை அணிக்கு எதிராக 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. இறுதியில் இந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 144 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தியா - இலங்கை அணிகள் இடையே ஆன முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 - 0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.
3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் புனேயில் 10-ம் தேதி நடக்கிறது.