தல 59 படத்தின் தலைப்பு - நேர்கொண்ட பார்வை வெளியாகியுள்ளது !

இயக்குநர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் பிங்க் படத்தின் ரீமேக்கிற்கு நேர்கொண்ட பார்வை என்று பெயரிடப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் தான் இந்தப் படம். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் பெயர் மற்றும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் பெயர் "நேர்கொண்ட பார்வை"

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

தல அஜித் குமார் முதல்முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்துவருகிறது.

இந்தப் படம் மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.