அஜித் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தில் இடம் பெறும் சண்டைக்காட்சிக்காக பெரிய ரிஸ்க் ஒன்றை எடுத்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் "வலிமை".
இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.
தற்போது துவங்கியுள்ள ஷூட்டிங்கில் முதன் முதலில் ஒரு ஆக்ஷன் காட்சியை தான் படமாக்கி வருகிறார். அதில் ஸ்டைலான மீசையுடன் இருக்கும் அஜித்தின் புது தோற்றம் கசிந்துவிடகூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் மொபைலுக்கு அனுமதி இல்லை.
சண்டைக்காட்சிகள் மிகவும் ரிஸ்காக உள்ளதால் டூப் போட்டு எடுத்துக்கலாம் தல என ஹெச்.வினோத் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு சம்மதிக்காத அஜித் டூப் எல்லாம் வேண்டாம் என்னால் முடிந்த வரை நானே நடிக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.
அஜித் 100 அடியில் குதிப்பது போல் ஒரு காட்சியை எடுத்துள்ளார்களாம். அஜித்தும் டூப் போடாமல் அந்த காட்சியில் நடித்து பிரம்மிக்க வைத்தாராம்.