அஜித் நடிக்கும் அவரது 60-வது படம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து துவங்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தற்போது நடிகர் அஜித் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் நேர்க்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இதனை தயாரித்திருக்கிறார்.
இந்தப் படம் அமிதாப் பச்சன் மற்றும் டாப்ஸியின் நடிப்பில் இந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இந்தப் படத்தை தொடர்ந்து அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்த தனது ட்விட்டர் பதிவில்,
A big thank you to the entire unit of #NerkondaPaarvai for working towards August 8th release. Happy to announce our next AK60 with #AjithKumar #HVinoth and @ZeeStudios will start with Pooja end August 2019.@SureshChandraa @DoneChannel1
— Boney Kapoor (@BoneyKapoor) July 29, 2019
நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது பட பூஜை ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கும் என்று கூறியுள்ளார்.