நேர்கொண்ட பார்வை - தணிக்கை சான்றிதழ் யூ/ஏ பெற்றது !

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் சென்சார் குறித்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ‘நேர்கொண்ட பார்வை' இந்த படத்தை எச்.வினோத் இயக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கனவர் போனிகபூர் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடிக்க வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

முன்னதாக இப்படம் ஆகஸ்ட் 10-ல் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், நேற்று இப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் போனிகபூர்.

இந்நிலையில் தணிக்கை குழு சான்றிதழ் பெற இப்படம் தணிக்கைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற் ‘யூ/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.