எச்.ராஜா - அந்த வீடியோவில் இருப்பது என் குரல் இல்லை - யாரோ எடிட் பண்ணிட்டாங்க
அந்த வீடியோவில் இருப்பது என் குரல் இல்லை, யாரோ என்னை போல பேசி இருக்கிறார்கள். நான் பேசியதை எடிட் செய்து, பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் சிலர் பரப்புகிறார்கள் என்று எச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளார். இதனால் பிரச்சனை ஏற்படும் என்பதற்காக போலீஸ் இந்த கூட்டத்திற்கு மேடை அமைக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஹைகோர்ட்டின் உத்தரவுப்படி தான் நடக்கிறோம் என போலீஸார் கூறினர்.
உயர் நீதிமன்றத்தை விமர்சித்த அவர், காவலர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பான அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகின்றது.
இதோ... எச்.ராஜா பேசிய வீடியோ..
ஹைகோர்டாவது ம...றாவது, காவல்துறை ஒரு ஊழல்துறை...எகிறிய எச்.ராஜா #HRaja
— iCineMass (@iCine_Mass) September 16, 2018
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் விநாயகர் ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசிய எச்.ராஜா…நீதிமன்றத்தை மதிப்பவன் நான். நான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் சிலர் பரப்புகிறார்கள் என்று கூறினார்.