உச்சநீதிமன்றம் - நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணைகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம்

உச்ச நீதிமன்றம் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளை, இனிமேல் விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

மூத்த வழக்கறிஞரான் இந்திரா ஜெய்சிங், அரசியல் சாசனம் மற்றும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நேற்று இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம். கான்வில்கர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம்.

இதன் மூலம் கிராமப்புற மக்களும் வழக்கு விசாரணை குறித்து அறிந்து கொள்ள முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதற்க்கு உச்சநீதிமன்ற அறிவிப்புக்கு, மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த விஷயத்தில், பார் சங்கத்தின் பரிந்துரையையும் சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது. இதனையடுத்து நேரடி ஒளிபரப்பிற்கான வழிகாட்டு நெரிமுறைகளை வரும் ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.