விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கினார்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.
ஆண்டுதோறும் மத்திய அரசு விளையாட்டுத்துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.
இதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் அறிவிக்கக்கப்பட்டது.
Virat Kohli, Mirabai Chanu conferred with Rajiv Gandhi Khel Ratna Award#RajivGandhiKhelRatnaAward #NationalSportsAwards2018 #ViratKohli#KhelRatna pic.twitter.com/enePy7LhcQ
— iCineMass (@iCine_Mass) September 25, 2018
தற்போது இதற்கான விருது வழங்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் விராட் கோலிக்கு விருது வழங்கப்பட்டது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கினார்.