சபாநாயகர் ரமேஷ்குமார் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்எல்ஏக்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
புதிதாக பதவியேற்றுள்ள எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும், நிதி மசோதாவையும் நிறைவேற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்தம் 14 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு 3 எம்.எல்.ஏக்கள், தற்போது 14 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
இவர்கள் அனைவரும் 2023 மே 15ம் தேதி வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்:
1) பிரதாப் கவுடா பாட்டீல் 2) பிசி பாட்டீல் 3) சிவராம் ஹெப்பர் 4) எஸ்.டி. சோமசேகர் 5) பைரதி பசவராஜ் 6) ஆனந்த்சிங் 7) ரோசன் பெய்க் 8) கே.சுதாகர் 9) முனிரத்னா 10) எம்டிபி நாகராஜ் 11) ஸ்ரீமந்த் பாட்டீல் 12) ரமேஷ் எல். ஜார்கோலி 13) மகேஷ் கும்தாலி
சுயேட்சை எம்.எல்.ஏ.
4) ஆர். சங்கர்
ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள்
15) ஹெச். விஸ்வநாத் 16) நாராயண் கவுடா 17) கோபாலய்யா
பா.ஜ.க. அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ள நிலையில் சபாநாயகர் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.