முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2020-ம் ஆங்கிலப் புத்தாண்டில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தடைகளை தகர்த்து சாதனைகளை படைப்போம் என்று கூறியுள்ளார்.
புத்தம் புது பொலிவுடன் மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நாம் அனைவரும், வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைத்து, வளமான தமிழகத்தை படைத்திடுவோம் என உறுதியேற்போம்.
இந்த இனிய புத்தாண்டில், அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருகட்டும், அமைதி நிலவட்டும் என்று வாழ்த்தி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.