ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா ஜெயலலிதாவுக்கு சொந்தம் என்று கூறப்படும் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என்று வருமானவரித்துறைக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலா.
இந்நிலையில் அவர் வாங்கி குவித்த சொத்துக்கள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சசிகலா தன்னிடம் இருந்த பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி பல்வேறு சொத்துகள் வாங்கிள்ள தகவல் முன்னரே வெளியானது.
தற்போது இதனைத்தொடர்ந்து மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சொந்தம் என்று கூறப்பட்ட கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தனக்கு சொந்தமானது என்று சசிகலா கூறி இருப்பதாக வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்ட விளக்க அறிக்கையில் தகவல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு மாதம் கழித்து, நவம்பர் மாதம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், சசிகலாவின் உறவினர் வீடுகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். அதில்தான் அவர் ரூ.1,900 கோடி அளவுக்கு பணமதிப்பிழப்பு நோட்டுகளை பயன்படுத்தி சொத்து வாங்கியது மற்றும் கடன் கொடுத்தது தெரிய வந்தது.
இதற்கு விளக்கம் அளிக்கும் படி வருமான வரித்துறை கோரியிருந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக சசிகலா தரப்பில் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பணமதிப்பிழப்பு நோட்டு பற்றியும், அதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்கள் பற்று எந்த தகவலும் தெரியாத என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தம் என்று கூறப்படும் கொடநாடு எஸ்டேட், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா பிரிண்டர்ஸ், ஜெயா பார்ம் ஹவுஸ், ஜெ.எஸ் ஹவுசின்ஹ் டெவலப்மெண்ட், ஜெய் ரியல் எஸ்டேட், கிரீன் பார்ம் ஹவுஸ் ஆகிவற்றில் பங்கு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.