இந்தியா - ஐ.நா. மனித உரிமை உறுப்பினராக அதிக வாக்குகள் பெற்று தேர்வு

ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் மொத்தம் 193 வாக்குகளில் 188 வாக்குகள் பெற்று இந்தியா வெற்றியை பெற்றுள்ளது.

சுமார் 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகள் போட்டியிட்டன. ஒருவர் உறுப்பினராக தேர்வாக 97 வாக்குகள் பெற வேண்டும். அந்த வகையில் 18 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக இதர நாடுகள் உறுப்பினர்களிடையே நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா மற்ற நாடுகளை விட அதிக ஆதரவை பெற்றுள்ளது. 188 வாக்குகளை பெற்றுள்ள இந்தியா வரும் 2019 ஜனவரி முதல் 3 ஆண்டுகளுக்கு அவையில் உறுப்பினராக இருக்கும்.

இது தொடர்பாக ஐ.நா.விக்கான இந்தியாவின் தூதுவர் சையது அக்பருதீன் கூறுகையில்:-

இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடு உறுப்ப்பினர்களுக்கும் நன்றி, மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.