கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் சுமார் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், இன்று அமலாக்கதுறை கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இவை அனைத்துமே அசையா சொத்துக்கள் என கூறப்படுகிறது.
இந்த சொத்துகள் அனைத்தும் ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு மூலமாக வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது