சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதை தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது என மனுவில் கோரப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்டு மாதம் இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கியது.

அதில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்றும், ஆணும் பெண்ணும் சமம் என்றும் அதிரதியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்புக்கு கேரள மாநில அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.