மலையாளப் படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை.
கடந்த 2 வாரத்துக்கு முன் வெளிவந்த 'திரில்லர்' படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' மாபெரும் வசூல் செய்து வருகிறது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை சிதம்பரம் இயக்கி இருந்தார். சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி எஸ் பொதுவால், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.
இந்த படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்து உள்ளார்.
இந்த படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, தற்போது ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.