உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு அளித்தது.
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணையை திரும்ப பெறப்போவதில்லை எனவும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் தெரிவித்திருந்தார்.
இதை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி தரப்பில் தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2006 - 2011 ம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும், பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த டிசம்பர் 19 ம் தேதி தீர்ப்பளித்தார்.
விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ததுடன், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
பொன்முடி இந்த வழக்கின் தீர்ப்ப்பு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் பொன்முடி உள்ளிட்டோர் மீதான சிறை தண்டனை நிறுத்தி வைத்துள்ளதுடன், ஜாமீனும் வழங்கி உள்ளது.