உச்சநீதிமன்றம் அதிரடி - புதுச்சேரியில் பாஜக 3 எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் !
புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகிய மூன்று பெரை சட்டமன்ற உறுப்பினராக நியமித்து அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 3 பேரின் நியமனம் செல்லும் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
ஆனால் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் நியமனம் எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இன்று தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரின் நியமனம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இவ்விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிடத் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.