முதலமைச்சர் - மேகதாது அணை விவகாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட, கர்நாடக மாநிலத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால் மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முதல் கட்டமாக ஆய்வு நடத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.

மத்திய நீர்வளத்துறை ஆணையம் திட்ட வரைவுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இறுதி அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதைத் தடுக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அந்த கடிதத்தில்:-

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முதல் கட்ட ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் . இந்த நடவடிக்கை காவிரி வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும் என அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.