இந்தோனேசியா விமான விபத்து - விமானத்தின் பாகங்கள் கண்டு பிடிப்பு
இந்தோனேஷியாவில் இருந்து பங்கல் பினாங்க் பகுதிக்கு சென்ற விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று கடலில் விழுந்து நொறுங்கியது.
இந்தோனேஷியாவில், லயன் ஏர் என்ற விமானம் தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல்பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம்.
இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன் ஏர் விமானம் ஜகர்தாவில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம், 7.20 மணிக்கு பங்கல் பினாங் பகுதிக்கு சென்றடைய வேண்டும்.
ஆனால் 188 விமானிகளுடன் பயணித்த இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதாவது 6.33 மணிக்கே, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமாகும்.
விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லயன் விமான நிறுவனத்தின் சிஇஓ எட்வர்ட் சிரெய்த் கூறுகையில்:-
தற்போதைக்கு எந்த விதமான தகவல்களையும் உறுதியுடன் கூற இயலாது, நாங்கள் பல்வேறு தகவல்களை திரட்டி வருகிறோம் எனத் தெரிவித்தார்.
188 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் நொருங்கி சிதறியது. கடலுக்குள் வீழ்ந்த விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டறியப்பட்டன.
இந்தோனேசியாவின் தேடுதல் மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் முகமது ஸ்யாகி இது குறித்து கூறுகையில்:-
உயிருடன் யாரும் இருப்பார்களா என்ற சந்தேகம் நிலவி வருகிறது என்று கூறுகிறார்.
விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலையை அறிந்து கொள்ள ஹெல்ப் லைன் எண்களை அறிவித்திருக்கிறது இந்தோனேசிய அரசாங்கம். 021-80820000 மற்றும் 021-80820002 இந்த எண்களை தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது லையன் ஏர்லைன் நிறுவனத்தின் தொடர்பு மையத்தை + 62 8788 033 3170 இந்த எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம்.