எச்.ராஜா - கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்

எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி, நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்பு கோரினார்.

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக, நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

எச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

இந்நிலையில் எச்.ராஜா இன்று காலை ஐகோர்ட்டில் ஆஜரானார். அவரது தரப்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், நீதிமன்றத்தை அவதூறாக பேசியது உண்மை தான். காவல்துறையிடம் வாக்குவாதம் செய்தபோது தவறுதலாக சில வார்த்தைகளை கூறிவிட்டேன். இப்படி பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவறாக பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என எச்.ராஜா கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து கொள்வதாக தெரிவித்தனர்.