கேன் குடிநீர் தடையின்றி கிடைக்கும் - உற்பத்தி நிறுத்தவில்லை

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், கேன் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்கும், உற்பத்தி நிறுத்தவில்லை என தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 3 ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், வணிக பயன்பாட்டிற்கு நிலத்தடி நீரை உறிஞ்சுதலை முறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கேன் குடிநீர் நிறுத்துவதால் ஒட்டுமொத்த மாநிலத்திற்கே பாதிப்பு ஏற்படும் என்ற வதந்தி தொடர்ந்து பரப்பப்பட்டு வந்த நிலையில் உள்ளது.

தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் ஒரு சிலர் உற்பத்தியை நிறுத்துவதால் ஒட்டுமொத்த மாநிலத்திற்கே பாதிப்பு ஏற்படும் என்பது போல் வதந்தி பரப்புகின்றனர்.

மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். உற்பத்தி நிறுத்தவில்லை, கேன் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்கும் என தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.