திமுக தலைவர் ஸ்டாலின் - நாடாளுமன்ற கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்
திமுக தலைவர் ஸ்டாலின் நாடாளுமன்ற கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என்று திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்துள்ளார்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்:-
திமுக உயர்மட்ட செயல்திட்ட ஆலோசனை குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் லோக்சபா தேர்தலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒருவேளை லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் வந்தால் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது, எப்படி கையாள்வது என ஆலோசிக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் நிலைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. என்ன தான் செயல்திட்ட குழுவில் ஆலோசித்தாலும் இது குறித்து விரைவில் தலைமை கழக நிர்வாகிகளுடன் பேசி, பின் பொதுக் குழுவில் முடிவு செய்து, தேர்தல் சமயத்தில் விரைவில் அறிவிப்போம்.
தமிழகத்தில் நடக்க உள்ள இடைத்தேர்தல்கள் குறித்தும் விவாதித்தோம். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.