எடப்பாடி பழனிச்சாமி - கஜா புயல் நிவாரணத்துக்கு 15,000 கோடி மத்திய அரசிடம் வலியுறுத்தல்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் 15,000 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
இன்று டெல்லியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்தார்.
தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை எடுத்துக் கூறி, மத்திய அரசுயிடம் 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்களை பிரதமரிடம் எடுத்துக் கூறி, புயல் நிவாரணமாக 15000 கோடி வழங்க வேண்டும் என கூறியிருக்கிறோம்.
இப்போது இடைக்கால நிவாரணமாக உடனடியாக 1500 கோடி ரூபாய் வழங்கும்படி கேட்டுக்கொண்டோம். மேலும் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, சேத விவரங்களை உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.
உடனடியாக மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறியிருக்கிறார் என்று இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கஜா புயல் பாதிப்பு தொடர்பான நிவாரண உதவிகள் குறித்த புள்ளி விவரங்களை உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது.