கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

இந்தோனேஷியாவில், லயன் ஏர் என்ற விமானம் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம்.

இந்தோ‌‌னேசிய தலைநகர் ‌ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், புறப்பட்ட 13- வது நிமிடத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 178 பயணிகள்‌, ஒரு குழந்தை, 2 பச்சிளங் குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 6 பணியாளர்கள் என 189 பேர் இருந்தனர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர்.

விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதந்தன. அவற்றை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். உயிரிழந்த பயணிகள் சிலரின் உடல்களும் மீட்கப்பட்டன.

விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. நீரில் மூழ்கி தேடும் வீரர்கள் இந்தப் பணியின் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேடி வந்த அவர்கள், இன்று ஒரு கருப்பு பெட்டி கண்டுபிடித்தனர்

கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதால், விமானத்தின் கடைசி நேர நிமிடங்களை அறிந்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு பெட்டியை ஆய்வு செய்த பின்னர் முழு விவரம் தெரிய வரும் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.