பிரதமர் மோடி - உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலை திறந்து வைத்தார்..!

உலகத்திலயே மிக உயரமான சிலையான 182 மீட்டர் உயரமுள்ள, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரர் மாவட்டத்தில் நர்மதை அணை அருகில் அவருக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல்.

சர்தார் வல்லபாய் படேல் நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில், ‘ஒற்றுமைக்கான சிலை’ என்று இது அழைக்கப்படுகிறது.

சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த நாளான இன்று ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்தச் சிலை நர்மதை ஆற்றங்கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள இதன் சிலை உயரம் 182 மீட்டர். இதுதான் உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது.

இந்தச் சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது. இதற்கு முன்னர் வைர உலகில் இருக்கும் உயரமான சிலை என்றால் அது சீனாவில் உள்ள புத்தர் சிலைதான்.

இந்த சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.