ஸ்டாலின் அறிவிப்பு - திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்
திமுக அறக்கட்டளை சார்பில் கஜா புயல் நிவாரணப்பணிக்காக ரூ.1 கோடி வழக்கப்படும் என்று தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன.
இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டியது நம் பொறுப்பு
கஜா புயலுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் எனவும் மேலும் கஜாவால் பாதித்த பகுதிகளை மறுசீரமைக்க திமுக எம்.எல்.ஏ, எம்.பிக்களின் ஒரு மாத சம்பளமும் வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.