மம்தா பானர்ஜி - 5 மாநில சட்டசபை தேர்தல் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி !

மம்தா பானர்ஜி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி, 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது என கூறியுள்ளார்.

5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது முதல் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகின்றது.

பாஜக ஆளும் மாநிலங்களில் கூட பின்னடைவை கண்டுள்ளது, 5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா பின்னடவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் பாஜக-வின் பின்னடைவினை குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.

ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி, அநீதிக்கு எதிரான வெற்றி, கல்வி நிலையங்களை அழித்து, நிதி நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி வரும் அரசினை மக்கள் எதிர்த்து வருகின்றனர் என்பது இந்த முடிவுகள் தெரிவிக்கின்றது.

அனைத்து மாநிலங்களிலும் பாஜக இல்லை என்பதை இந்த அரையிறுதி நிரூபித்து விட்டது. 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள இறுதி போட்டியில் நாட்டில் பாஜக இல்லை என்பது முழுமையாக வெளிப்படும்.

ஏழைகளுக்கு ஆதரவு அளிக்காத ஆட்சியினை மக்கள் வெளியேற்ற விரும்புகின்றனர் என்பதை இந்த முடிவுகள் தெரிவிகின்றது என மம்தா பானர்ஜி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.