இனிமேல் அப்படிதா - 57 நாட்களாக குறைந்து வந்த பெட்ரோல் விலை உயர்ந்தது
கடந்த 57 நாட்களாக குறைந்து வந்த பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் உயர்ந்துள்ளது.
இரண்டு மாதகளுக்கு முன்பு தினமும் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே இருந்தது.
கடந்த அக்டோபர் 16-ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 86 ரூபாய் 10 காசுகளாக இருந்தன.
எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றும் விலை ஒருபக்கம், மத்திய அரசின் வரி ஒருபக்கம், என்று விலை உயர்ந்து கொண்டே இருந்தது. இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்தியா முழுக்க பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் நிறுத்தப்பட்டது.
கடந்த 57 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் சிறிது சிறிதாக குறைக்கப்பட்டும் வந்தது. தினமும் 10 பைசா, 20 பைசா வீதம் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது.
57 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது.
இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையேறியுள்ளது. 5 மாநில தேர்தலின் பொருட்டு கடந்த 57 நாட்களில் விலை குறைந்து வந்த நிலையில், தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விலையானது ஏறத் தொடங்கியுள்ளது.
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில், தொடர்ந்து 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை சரிவு கண்டது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை அதிக அளவு ஏற்றம் கண்டது.