செந்தில் பாலாஜி - திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டதில் பெருமைப்படுகின்றேன்!
அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டதில் பெருமைப்படுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்புச் செயலாளராக, முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி இருந்து வந்தார்.
அங்கு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மவுனம் காத்த செந்தில் பாலாஜி இன்று பகல் 12 மணிக்கு சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார்.
மு.க.ஸ்டாலின் அறைக்கு செந்தில் பாலாஜி சென்றார். அங்கு ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுக.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும். மாண்புமிகு அம்மாவின் மறைவுக்கு பிறகு தளபதி அவர்களின் தலைமைப் பண்பு என்னை ஈர்த்ததால், தளபதி முன்னிலையில் திமுக.வில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டதில் பெருமைப்படுகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.