அப்பல்லோ மருத்துவமனை - 75 நாட்களில் ஜெயலலிதாவின் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவு
ஜெயலலிதாவின் உணவுக்காக 75 நாட்களில் ரூ. 1.17 கோடி செலவானதாகவும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வரான ஜெ.ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் உயிரிழந்தார்.
முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி ஜெ. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்.
அதில் அப்போலோ மருத்துவமனை இன்று ஆறுமுகசாமி விசாராணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உணவிற்காக மட்டும் ரூபாய் 1,17,04,925 செலவாகியுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றதற்கு ரூ.6.85 கோடி செலவானதாகவும், அதில், 75 நாட்களில் உணவுக்கு மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் செலவானதாகவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
அப்போலோ வெளியிட்ட அறிக்கையில்:-
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக ரூ.6.85 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறது.
லண்டனில் இருந்து வந்து, ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலேவிற்கு மருத்துவக்கட்டணமாக ரூ. 92.7 லட்சம் வழங்கப்பட்டது.
உணவு செலவு இல்லாமல் இதர செலவுகளான பிசியோதெரப்பிக்காக சுமார் 1.29 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்று வந்த வார்டிற்கான செலவு ரூ. 24 லட்சம்.
சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்கியதற்கான அறை வாடகை 1.24 கோடி என்றும் அப்போலோ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.