தமிழக சட்டப்பேரவை கூட்டம் - ஜனவரி 2-ம் தேதி தொடங்குகிறது !
வரும் ஜனவரி 2-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கூடுகிறது என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் பேரவை தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அன்றைய நாளில் முடிவு செய்யப்படும்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசியலமைப்பு, பிரிவு 174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தை, 2019 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி, காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசியலமைப்பு, பிரிவு 176 (1)-ன் கீழ், தமிழ்நாடு ஆளுநர் அன்றைய தினம் காலை 10 மணிக்கு உரை நிகழ்த்துவார் என தெரிவித்துள்ளார்.