பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24708 சிறப்புப் பேருந்துகள்
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பொங்கல் பண்டிகையை யொட்டி சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 14,263 பேருந்துகள் இயக்கப்படும். இந்த சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் ஜனவரி 9-ஆம் தேதி முதல் நடைபெறும்.
பொங்கள் முடிந்து சென்னைக்கு திரும்புவதற்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து மொத்தம் 14 ஆயிரத்து 263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கடந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையின்போது, மொத்தம் 4 லட்சத்து 92 ஆயிரத்து 20 பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.