எடப்பாடி பழனிசாமி - பொங்கல் பரிசோடு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார்

இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பொங்கல் சிறப்பு பரிசாக அறிவிப்பு கடந்த டிசம்பர் 22-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் போனசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு பச்சை நிற ரே‌சன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி 20 கிராம், உலர் திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த பரிசுத் தொகுப்புடன் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக 1000 ரூபாய் பொங்கல் பரிசு அளிக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் அறிவித்தார்.

2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 நியாய விலை குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

வரும் திங்கட்கிழமை முதல் அந்தந்த நியாய விலைக்கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்போடு 1000 ரூபாயை மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இன்று மாலை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு ஆகியவற்றை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும் இதற்காக 1,979 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.