தமிழக பட்ஜெட் - பிப்ரவரி 8-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்
வரும் 8-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 8-ம் தேதி பேரவைத் தலைவர் கூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8-ம் தேதி காலை 10 மணிக்கு 2019 - 2020-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
நிதிப் பொறுப்பைகவனித்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்வார்.
பின்னர் அன்றய தினம் மாலை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.