முதல்வர் அறிவிப்பு - விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்தார்
இன்று விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சி என்னும் புதிய தமிழகத்தின் 33-வது மாவட்டமாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் இதை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி மாவட்டமாக தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளகுறிச்சியை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நிர்வாக வசதிக்காகவும், கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாலும், கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுவரை தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தமிழத்தை பொருத்தவரையில் மாவட்டங்களில் அதிக ஊராட்சி ஒன்றியங்களை கொண்டதில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்றாக இருக்கிறது. அந்தவகையில், 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சரிசமமாக மாவட்டத்திற்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் பிரிய உள்ளது.
விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரியாக IAS அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.