உச்ச நீதிமன்றம் - ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுப்படுவதால் ஆலையை மூடக்கோரி மக்கள் பெரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த மே மாதம் 22-ம் தேதி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெரும் கலவரம் மூண்டது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.
இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. ஆலையில் இருந்து ரசாயனங்கள் அகற்றப்பட்டன.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மாதம் அனுமதி அளித்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, ஆலையை திறக்க அனுமதி அளித்துள்ளது.