சுப்ரீம் கோர்ட் - கொடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி
உச்சநீதிமன்றம் கொடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது.
டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். பின்னர் 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து பல முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இவர்கள் விபத்தில் இறந்ததாக சொன்னாலும், அது சந்தேகத்துக்கு இடமான ஒன்றாகவே இருந்தது. மேலும் சம்பவம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது.
அதில் மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதே போல் வழக்கில் 2-வது இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் தெகல்கா இணைய தள முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.
குற்றவாளியான சயான் மற்றும் மனோஜ் ஆகியோரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அனைத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் நடந்தது என தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.